இலங்கை பாராளுமன்றத்துக்கு அருகாமையில் காலை வேளையிலே மக்கள் போராட்டம் ஆரம்பித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்செல்லும் வாயிலுக்கு அருகாமையில் காலை 10 மணியளவில் சிறியளவிலான இளைஞர்களினால் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு அந்த இடத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்தது.
பாராளுமன்றதுக்கு செல்லும் ஜப்பான் – இலங்கை நட்புறவு வீதி சந்தியில் மக்கள் கூட்டம் காலை 10.30 மணியளவில் போராட்டத்தை ஆரம்பித்து தொடர்ந்து நடாத்தப்பட்டு வருகிறது. நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அந்த இடத்தில் அதிகரித்து வருகிறது.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் உறுப்ப்பினர்களும் மக்கள் போராட்டங்களுக்காக பாராளுமன்றம் நோக்கி வருகை தருகிறார்கள் என தங்களது\பேச்சுக்களில் தெரிவித்து வருகின்றனர். இன்றும் பாரியளவிலான போராட்டங்கள் நடைபெறுமெனவும், குறிப்பாக பாராளுமன்ற சூழலில் போராட்டங்கள் நடைபெறுமென எதிர்பார்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
