முதற் தடவையாக சிங்கள மக்கள் அரசுக்கு எதிராக போராடுகிறார்கள்

இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக சிங்கள மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக போராடுகிறார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாரளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றைய பாராளுமன்ற உரையில் தெரிவித்துள்ளார்.

முதற் தடவையாக இலங்கை இராணுவம், சிங்கள மக்களுக்கு எதிராக திரும்பியுள்ளது. அரசாங்கம் அவர்களுக்கு ஏதிராக செயற்படுகிறது. சிங்கள மக்கள் பொருளாதார வீழ்ச்சிக்காக மட்டும் போராடவில்லை, அராசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் எதிராக போராடுகிறார்கள். இது எவ்வளவு பயங்கரமானதென்பதை பார்க்க முடிகிறது என பாரளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் மேலும் தெரிவித்துளளார்.

பல தசாப்தங்களாக சிங்கள மக்கள் அரசியல் வாதிகளினாலும், அரசாங்கங்களினாலும் திருடப்பட்டுள்ளதாக உணர்கிறார்கள். அதனாலேயே அவர்கள் வீதிகளில் இறங்கி போராட ஆரம்பித்துள்ளனர். தமிழ் மக்கள் 74 வருடங்களுக்கு முன்னர் திருடப்பட்டுவிட்டனர். அதனை நாங்கள் பல காலமாக கூறி வருகிறோம் என உரையாற்றிய கஜேந்திரகுமார்

இந்த சந்தர்ப்பமானது இலங்கையில் சகல மக்களும் சமத்துவமாக வாழ்வதற்கான புதிய மாற்றத்தை உருவாக்குவதற்கான ஒரு பொற்காலம். சிங்கள மற்றும் தமிழ் மக்கள் இணைந்து வாழும் நாடு என்பதனை வெளிக்காட்ட உருவாகியுள்ளதாகவும் அவரது உரையில் கூறியுள்ளார்.

முதற் தடவையாக நாங்கள் தமிழர்கள் உங்களுக்கு உதவ முன்வந்துள்ளோம். நீங்கள் எங்களுக்கு உதவுங்கள். இந்த நாட்டின் நிறைவேற்று அதிகாரத்தை மாற்றுவதற்கு மட்டுமல்ல சமத்துவ ஆட்சியின் கீழ் சிங்கள, தமிழ் மக்கள் சமத்துவமாக வாழ மீளமைக்கப்பட்ட இலங்கையினை உருவாக்க நீங்கள் கட்டாயம் எமக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையினையும் கஜேந்திரகுமார் பாராளுமன்றத்தில் முன் வைத்தார்.

முதற் தடவையாக சிங்கள மக்கள் அரசுக்கு எதிராக போராடுகிறார்கள்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version