ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் தலிபான்கள் பலி

ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் ஆட்சி அமைக்கப்பட்டு பிரதமராக ஹசன் அகுந்த்தும், துணைப்பிரதமராக முல்லா கனியும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் பகுதியில் நடத்தப்பட்ட மூன்று குண்டுவெடிப்புகளில் மூன்று பேர் பலியாகியுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக ஆப்கான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இன்றைய தினம் நடைபெற்ற இக் குண்டு வெடிப்பில் இருவர் உயிரிழந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரு தலிபான்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளதுடன்; இருபதிற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும், காயமடைந்தோர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இத்தாக்குதல் யாரால் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் இதுவரை யாரும் பொறுப்புக் கூறவில்லை.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version