ஐ.பி.எல் இன்று மீள் ஆரம்பம் – வீடியோ இணைப்பு

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடர் மீண்டும் இன்று ஆரம்பமாகவுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான தொடர் இந்தியாவில் ஆரம்பித்து நடைபெற்று வந்து வேளையில் கொரனோ தோற்று மீண்டும் அதிகரித்தது. பல வீரர்களும் பாதிக்கப்பட்டனர். உடனடியாக போட்டி இரத்து செய்யப்பட்டது.

இரண்டாம் கட்டமாக இன்று முதல் போட்டிகள் ஐக்கிய அரபு இராட்சியத்தில் ஆரம்பிக்கவுள்ளன. இன்று சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி முப்பதாவது போட்டியாக நடைபெறவுள்ளது.


சென்னை சுப்பர் கிங்ஸ் 7 போட்டிகளில் 10 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும், மும்பை இந்தியன்ஸ் 7 போட்டிகளில் 8 புள்ளிகளுடனும் மூன்றாம், நான்காம் இடங்களில் காணப்படுகின்றன.
அடுத்த கட்டத்தை நோக்கி இலகுவாக நகர இரண்டு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் காணப்படுகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version