தமிழர் விடுதலை கூட்டணியினது இடைக்கால நிர்வாகசபை அண்மையில் தெரிவு செய்யப்பட்டது. சில முக்கியமான பதவிகளுக்குரியவர்கள் விலகிச் சென்றது மற்றும் கட்சிக்கு எதிராக செயற்பட்ட காரணங்களினால் நீக்கப்பட்டு புதியவர்கள் அந்த இடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இடைக்கால நிர்வாக சபை குறுகிய கலாத்துக்கானதாக மத்திய குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளது. ஒரு மாத காலத்துக்குள் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அதில் பொதுச்சபை புதிய நிர்வாகத்தினை தெரிவு செய்யுமென தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்தசங்கரி வி மீடியாவுக்கு தெரிவித்துள்ளார்.
அண்மைய காலத்தில் சிலரது செயற்பாடுகள் காரணமாக பல துன்பங்களை அன்பவித்து விட்டதாகவம், தேர்தல்கள் ஆணையகம் கட்சியின் செயலாளர் தானே என அறிவித்துள்ளதாகவும், இனி அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கட்சியின் இளைஞர் பேரவை, மகளிர் பேரவை, தொழிற்சங்கம் போன்றவை உயிரிழந்து போயிருந்ததாகவும், அவற்றை மீள உருவாக்கி அவற்றுக்கு தலைவர்களை நியமித்துள்ளதாகவும் தெரிவித்த ஆனந்தசங்கரி கட்சியின் செயற்பாடுகள் துரித கதியில் இனி வரும் காலங்களில் நடைபெறுமெனவும் தெரிவித்தார்.
தந்தை செல்வா, G.G பொன்னம்பலம். தொண்டமான் ஆகியோர் இணைந்து உருவாக்கிய இந்த கட்சி, மீளெழுச்சி பெறும். நான் இறப்பதற்கு முன் அதனை ஏற்படுத்தி இந்த கட்சியினை உயர் இடத்துக்கு கொண்டு செல்வேன் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வி, ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
புதிய இடைக்கால நிர்வாக சபை
தலைவர் – ப. சிறிதரன் (சட்டத்தரணி )
சிரேஷ்ர துணை தலைவர்- ஐயம்பிள்ளை அசோக்குமார்
செயலாளர் நாயகம் – வீ ஆனந்தசங்கரி.
நிர்வாகச் செயலாளர்- க. பூலோகரட்ணம்.
பொருளாளர்- தி சஞ்சயன்.
இணைப்பொருளாளர் – வேதாரணியன்.
இளைஞர் பேரவை தலைவர் – கணேசநாதன் சபேசன்.
மகளீர் பேரவை தலைவர் – திருமதி சூரியமூர்த்தி சூரியபிரதீபா வாசவன்
சட்டம் மற்றும் ஒழுங்கு தலைவர் – ஐயம்பிளை யசோதரன்.
தொழிற்சங்கத் தலைவர் – சித்திரவேல் தயாபரன்.
வி.ஆனந்தசங்கரி கட்சியின் மீளுருவாக்கம் தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்துக்களின் காணொளி