லிற்றோ தலைவர் பதவி விலகினார்

லிற்றோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெசார ஜெயசிங்க அந்த பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கையளித்துள்ளார். லிற்றோ எரிவாயு நிறுவனம் கடந்த காலங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு, தரமற்ற எரிவாயு சிலிண்டர்கள் வெடித்தமை, எரிவாயு தட்டுப்பாடென பல சிக்கல்கள் உருவாகியிருந்தன.

அண்மைக்கால தட்டுப்பாடு சீராகிவரும் நிலையில் பதவி விலகலை இவர் அறிவித்துள்ளார். சிலிண்டர் வெடிப்புகளின் போது இவர் பதவி நீக்கம் செய்யபப்ட்ட போதும் மீண்டும் தலைவராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட இவர், தற்போது பதவி விலகல் கடிதத்தை வழங்கியுள்ளார்.

அண்மைக்கால பொருளாதார சிக்கல்கள் மற்றும் அவை தொடர்பிலான அழுத்தங்கள் இவரது பதவி விலகளுக்கு காரணமாக அமைந்துள்ளதாக நம்பப்படுகிறது.

லிற்றோ தலைவர் பதவி விலகினார்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version