கல்வி பொது தராதர உயர் தர பரீடசை, சாதாரண தர பரீட்சை, தரம் 05 இற்கான புலமை பரிசில் பரீட்சைகளை நடாத்துவது தொடர்பில் பரிசீலனைகள் நடைபெற்று வருவதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
சுகாதர துறையினர், மற்றும் கல்வி துறையினர் இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் நிவைக்கு வருகின்றன. மாணவர்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றும் பணிகளும்’ஆரம்பிக்கவுள்ளன. அவ்வாறு ஏற்றப்படும் நிலையில், அதனை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் உள்ள சிக்கல் நிலைகள், அதற்க்கான தேவைகள், நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதர துறையினர், மற்றும் கல்வி துறையினர் இணைந்து ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நவம்பர் 15 ஆம் திகதி உயர்தர பரீட்சசைகள் ஆரம்பிப்பது என அரசாங்கம் ஆரம்பத்தில் அறிவித்திருந்தது. அதில் மாற்றங்கள் ஏற்படுமா என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. சாதரண தர பரீட்சசைகள் அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்தில் நடைபெறுமென அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.