தனது இளைய சகோதரர் இயக்கும் முதல் படத்தில் நடிகர் பிரபுதேவா

பிரபு தேவாவின் இளைய சகோதரரான நாகேந்திர பிரசாத் தமிழில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட மற்றும் பலர் நடிப்பில் வெளியான ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தை கன்னட ரீமேக்கில் இயக்கி வருகிறார்.

இயக்குநராக அவர் இயக்கும் முதல் படமான இத்திரைப்படத்தில் புனித் ராஜ்குமார், கிருஷ்ணா, சங்கீதா ஸ்ரீங்கேரி, ரோஷினி பிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தற்போது இத் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் தற்போது படமாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பாடலை நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் இயக்குவதுடன் நடிகர் புனித் ராஜ்குமாருடன் இணைந்து பிரபுதேவா நடனமாடவுள்ளதாக தகவல்கள் வந்த நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

தனது இளைய சகோதரர் இயக்கும் முதல் படத்தில் நடிகர் பிரபுதேவா
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version