அமெரிக்க விமானமொன்றில் இருந்து வெளியேற்றப்பட்ட அமீர்கான்

அமெரிக்க ஏர்லைன் விமானமொன்றில் தனது நண்பர் குழுவுடன் பயணம் செய்யவிருந்த நிலையில், அவரது நண்பர் ஒருவரின் முகக்கவசத்தின் அளவு தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டிற்கமைய விமானப் பயணக் குழுவிற்கும் குத்துச் சண்டை வீரர் அமீர்கானுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறினால் இவர் வெளியேற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் விமானப் பயணக்குழு தங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் குழுவினரின் பாதுகாப்பிற்காக செயல்படுத்தப்பட்ட கொள்கைகளின் முக்கியத்துவத்தை கருத்திற்கொணடே முடிவெடுக்கப்படதென தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அமீர்கான், நான் இன்று கொலராடோ ஸ்பிரிங்ஸக்கு பயிற்சி முகாமிற்குச் செல்லவிருந்த வேளை இவ்வாறு விமானத்தில் இருந்து வெளியேற்றியமை கவலையளிக்கின்றது. விமானப் பயணக் குழு எனது நண்பர் ஒருவரின் முகக்கவச அளவு போதுமானதாக இல்லை என முறையிட்டதுடன், அதில் தொடர்பில்லாத என்னையும் சேர்த்து வெளியேற்றியுள்ளார்கள். இவ்வகையான செயற்பாடு வெறுப்பை ஏற்படுத்துகின்றது. நாங்கள் இனி இன்னொரு விமானத்தில் பயிற்சி நிலையத்திற்குப் பயணிக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். விமானநிலையத்தில் பொலிஸார் நின்றிருந்த போதும் அவர்கள் இவ்விடயத்தில் தலையிட்டிருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க விமானமொன்றில் இருந்து வெளியேற்றப்பட்ட அமீர்கான்
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version