தானாக இயங்கிய டிப்பர் விபத்து

வவுனியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் தானாக இயங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.வவுனியா பழைய பஸ் நிலையத்தில் டிப்பர் வாகனத்தை சாரதி நிறுத்திவிட்டு கை பிரேக்கினை பாவிக்காமல் இறங்கியுள்ளார்.

அதன் பின்னர் தானாக இயங்கிய டிப்பர் A 9 வீதிக்கு குறிக்காக சென்று, நடைபாதை பாதுகாப்பு கம்பிகளையும் இடித்து சென்று நின்றுள்ளது. எதிரே இருந்த கடை மயிரிழையில் தப்பித்துள்ளளது.

A 9 வீதிக்கு குறுக்காக டிப்பர் செல்லும் போது வாகனங்கள் எதுவும் வராத காரணத்தினால் விபத்துக்கள் எதுவும் இடம்பெறவில்லை. உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. டிப்பர் முழுவதுமாக கல் நிரப்பப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


டிப்பர் வாகனத்தன் முன் பக்கம் சேதமடைந்துள்ளது. வீதி போக்குவரத்து பொலிசார் தங்களுக்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version