லிட்ரோ எரிவாயு விலையேற்றம் சிக்கலில்!

12.5 Kg லிட்ரோ சமையல் எரிவாயு 5175 ரூபாவாக விலையேற்றப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்திருந்தது. நேற்று இரவு முதல் விலையேற்றம் நடைமுறைக்கு வருவதாக அந்த நிறுவனம் அறிவித்திருந்த போதும் அரசாங்கம் அதற்கான அனுமதியினை வழங்கவில்லை என நிறுவனமே தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல்களின் படி விலையேற்றத்துக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், ஆனால் லிட்ரோ நிறுவனம் அறிவித்த விலையேற்றம் வழங்கப்படாது என தெரியவருகிறது. இருப்பினும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. தாம் விலைகுறைப்புக்கான தயார்படுத்தல்கள் எதனையும் செய்யவிலையெனவும் மேலும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

லிட்ரோ நிறுவனம் 25 ஆம் திகதி வரை எரிவாயு கையிருப்பில்லாமையினால் தனது விநியோகத்தை நிறுத்தி வைத்துள்ளது.

லிட்ரோ எரிவாயு விலையேற்றம் சிக்கலில்!
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version