நாடு வீழ்ந்துள்ள நிலையிலிருந்து நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்க தயாராக இருப்பதாகவும், நாட்டில் மேலேலுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தி என தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தனக்கு உலகை ஆளும் பேரரசர் ஆட்சிப்பதவியை வழங்குவதாக உறுதியளித்தாலும் கள்வர் கும்பலோ அல்லது ராஜபசர்களுடனோ இணைந்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்கப்போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சுமார் 150 ஆசனங்களுடன் இரண்டரை வருடங்களாக மரணப்படுக்கையில் இருந்த அரசாங்கம், இப்போது கூட்டணி ஆட்சிக்கு வாருங்கள் என்கிறார்கள்.வந்து பிரதமர் பதவியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்கிறார்கள்.வந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்கிறார்கள். ஆனால், யாருடைய மனதையும் கெடுக்கும் நோக்கில் திருட்டு அரசாங்கத்தை அமைக்க நாங்கள் தயாராக இல்லை என எம்பிலிபிட்டியவில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மக்கள் அபிப்பிராயத்தின் மூலம் ஆட்சி அமைக்கவே தயாராக உள்ளோம்.ராஜபக்சர்களுடன் ஒரு டீலை மேற்கொள்வதை விட வீட்டுக்குச் செல்வது எனக்கு சுகம்.இரண்டரை வருடங்களாக நாட்டை குட்டிச்சுவராக்கி, நாட்டையே அழித்துவிட்டு இப்போது பொய் இரக்கைகளை அணிவிக்க வருகிறார்கள்.அந்த இரக்கைகளை அணிய நாங்கள் தயாரில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தனது உரையில் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தி சமூக ஜனநாயக கொள்கை சார் வேலைத்திட்டத்தையே நடைமுறைப்படுத்துகிறது எனவும்,”இது தீவிர தாராளவாதத்தையே அல்லது உச்ச முதலாளித்துவத்தையே அல்ல” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
