ஆளும் கட்சிக்குள் மேலும் பிளவு?

ஆளும் பொதுஜன பெரமுன கட்சிக்குள் மேலும் பிளவுகள் ஏற்பட்டுளளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியிலிருந்து விலகவேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்குள் தனித்து செயற்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி, பிரதமர் தாம் பதவிகளை விட்டு விலகவேண்டிய தேவையில்லை என்ற கருத்தை முன்வைத்து வருகின்றனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பாக ஒரு குழுவினரும், பிரதமர் மஹிந்த ராஜபகஷவுக்கு சார்பாக ஒரு குழுவினருமென இழுபறி தொடர்கிறது. பாராளுமன்றத்துக்கு அதிகாரத்தை வழங்கி அதனூடாக ஆட்சியை நகர்த்தி செல்வது தொடர்பில் பாராளுமன்றத்துக்குள் அனைத்து கட்சிகளும் தங்களது நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

ஆளும் பொதுஜன பெரமுனவின் ஏற்கனவே விலகிய குழுவினரும் எதிர்க்கட்சிகளும் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டு வருவதாக அறிய முடிகிறது. மறு புறத்தில் ஜனாதிபதி, அண்மையில் நியமிக்கப்பட்ட அமைச்சரவையும், பிரதமர் பதவியினையும் மாற்றி இடைக்கால அமைச்சரவை ஒன்றை மீண்டும் நியமிப்பது தொடர்பில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஜனாதிபதி பதவியை விட்டு விலகவேண்டுமென்ற போராட்டங்கள் வலுவடைந்து வருகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினமும் போராட்டங்கள் நடைபெற்றன. தொடரும் அரசியல் இழுபறி நிலைக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதர சிக்கலை எவ்வாறு தீர்ப்பதென்பது கேள்விக்குறியாக மாறி வருகிறது.

அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டால் மட்டுமே தொடர்ந்தும் இலங்கையின் பொருளாதர சிக்கலை சீர் செய்ய முடியுமென்பது வெளிப்படை உண்மை. இந்த வாரம் இலங்கை அரசியியலில் மாற்றங்கள் ஏற்படலாமென்ற பேச்சுகளும் அதிகமாக பரவி வருகின்றன.

ஆளும் கட்சிக்குள் மேலும் பிளவு?
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version