இ.தொ.கா நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக கட்சியின் செயலாளர் ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார். சற்று முன்னர் கட்சியின் நிலைப்பாட்டை அவர் அறிவித்துள்ளார்.

“நாட்டில் தற்போது அரசியல் ,பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அரசியலமைப்பின் 20வது சீர்திருத்தத்தை இரத்து செய்யவும் ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.

எனவே நாட்டு மக்களினதும் மலையகப் பெருந்தோட்ட மக்களின் நலன் கருதியும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உயர் பீடமானது நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க கட்சியின் உயர் பீடம் தீர்மானித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version