அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு உறுதி செய்துள்ளது.
கிடைத்துள்ள அறிக்கையின் உள்ளடக்கங்களை அரசாங்கம் ஆழமாகப் பரிசீலித்து எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயவுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் தெரிவித்தார்.
அர்ப்பணிப்போடும் , ஈடுபாட்டோடும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அறிக்கயினை தயாரித்தமைக்காக அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி தனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவிதுள்ளதாக மேலும் ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.