சாணக்கியன் MP அரசு எதிர்ப்பு போராட்டங்களில் பங்குபற்ற தடை

பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் அவர் சம்மந்தப்பட்டவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில், அரச, தனியார் உடமைகளை சேதம் விளைவிக்கும் வகையில் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என களுவாஞ்சிக்குடி பொலிஸாரினால் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெறப்பட்டு, அது சாணக்கியனிடம் வழங்கப்பட்டுள்ளது.

“இந்த செயற்பாடானது வடக்கு கிழக்கு மற்றும் தமிழ் மக்களுக்கு தனியாக தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இதுதானா ஒரே நாடு, ஒரே சட்டமா அல்லது தமிழர்களுக்கான தனி சட்டமா என்பதுதான் நீண்ட நாட்களாக நாங்கள் எழுப்பிவரும் கேள்வி. என சாணக்கியன் MP தெரிவித்துள்ள அதேவேளை, இலங்கை பூராகவும் மக்கள் வீதிகளில் போராடுகிறார்கள். இந்த நியூலையில் களுவாஞ்சிகுடி பொலிஸ் பொறுப்பதிகாரி மட்டும் இவ்வாறு தடையுத்தரவை பெற்றிருக்கிறார். இதுதான் அராஜகமான நிலை எனவும் இது ஏற்றுக் கொள்ளமுடியாத விடயம் எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான விடயங்களை அரசு மேற்கொள்ளும் போதே இன்னும் போராட்டங்கள் செய்யவேணும், ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும், இன்னும் இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென ஆர்வத்தை தூண்டுகிறது. கோட்டா வீட்டுக்கு போகும் வரை போராட்டங்கள் தொடர வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மேலும் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஏப்ரல் 29 ஆம் திகதி வரை இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சாணக்கியன் MP அரசு எதிர்ப்பு போராட்டங்களில் பங்குபற்ற தடை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version