பிரதமருக்கு பெரும்பான்மை. சந்திப்புகளில் திடீர் மாற்றம்

ஜனாதிபதிக்கும், அரசாங்கத்தின் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்குமிடையில் இன்று காலை நடைபெறவிருந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய கட்சிகளது தலைவர்களுடனான சந்திப்பு தற்போது நடைபெறுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

நேற்று மாலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் ஆளும் கட்சி பாரளுமன்ற உறுப்பினர்களை சந்தித்ததாகவும், அதன் போது 109 பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூகமளித்திருந்ததாகவும் 117 உறுப்பினர்கள் பிரதமர் – ஜனாதிபதி இணைந்த கூட்டணிக்கு ஆதரவு வழங்கியுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினை கொண்டிருப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு ஜனாதிபதி பிரதமரை பதவி விலக கோரவில்லை என மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமருக்கு பெரும்பான்மை. சந்திப்புகளில் திடீர் மாற்றம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version