புதிய பிரதமரோடு இடைக்கால அரசாங்கம் அமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்மதம் தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவரும் முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்திலிருந்து விலகிய 11 கட்சிகளின் தலைவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. அந்த சந்திப்பிலேயே ஜனாதிபதியுடன் இந்த முடிவு எட்டப்பட்டதாக மைத்திரிபால சிரிசேன மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அடங்கிய ஆளும் கட்சி ஜனாதிபதியினை சந்தித்த வேளையில் “தான் பிரதமரை பதவி விலக கூறவில்லையென தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று இவ்வாறான தகவல் வெளியாகியுள்ளது.