கனடா நாட்டின் 44வது பொதுத்தேர்தல் இன்று ஆரம்பமாகியுள்ளது. தற்போது பிரதமராகவுள்ள ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ்கு எதிராக கடும் போட்டி நிலவுவதாக கனேடிய செய்திப்பிரிவு தெரிவுத்துள்ளது.
27 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களிக்க தகுதியுடையவர்களாக இருப்பதுடன் , இந்த வாரம் அண்ணளவாக 5.78 மில்லியன் வாக்குகள் முன்கூட்டியே வாக்கெடுப்பில் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த இரு தேர்தல்களிலும் வெற்றி பெற்று பிரதமராக தெரிவு செய்யப்பட்ட ஜஸ்ரின் ட்ரூடோ தனது லிபரல் கட்சியில் இவ்வருடமும் போட்டியிட்டு பிரச்சாரப்பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில், எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியில் போட்டியிடும் எரின் ஓருல் இற்கும் லிபரல் கட்சிக்குமிடையே கடும் போட்டி நிலவுவதுடன் இம் முறை கன்சர்வேடிவ் கட்சி முன்னிலை வகிப்பதாக கனடா நாட்டின் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே இரு தடவைகள் பிரதமர் பதவி வகித்துள்ள ஜஸ்ரின் ட்ரூடோ கனேடிய மக்கள் மட்டுமில்லாது உலகளவிலும், தமிழ் மக்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளார். இந்நிலையில் தற்போது நடைபெற்றள்ள கருத்துக்கணிப்புக்கள் அவரது வெற்றிக்கு அதிக போட்டித்தன்மையை வெளிப்படுத்தியுள்ள போதும் முன்னால் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஜஸ்ரின் ட்ரூடோவிற்கு தனது ஆதரவை வழங்குவதாக தெரிவித்திருந்தார்.