ஜனாதிபதி, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு

அரசாங்கத்துக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் ஜனாதிபதிக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஆகிய இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தனவிடம் எதிர்க்கட்சி இன்று கையளித்தது.

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, மற்றும் பாரளுமன்ற உறுப்பினர்களான இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர், கயந்த கருணாதிலக, எரான் விக்கிரமரத்ன, மனுஷ நாணயக்கார ஆகியோர் சபாநாயகரிடம் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை கையளித்தனர்.

நம்பிக்கையில்லா பிரேரணையை கையளித்த பின்னர் எதிர்க்கட்சி தலைவர் மக்களின் கோரிக்கைகளை காட்டிக்கொடுத்தது யார்? இப்போது புரிந்துகொள்ள முடியுமென கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்நாட்டு மக்கள் கோரும் வெற்றிக்காக இன்று தீர்க்கமானதொரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கமைவாக அரசாங்கம் மற்றும் ஜனாதிபதிக்கு எதிராக இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டு வரப்பட்டதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மக்களின் எதிர்பார்ப்புகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி செயற்படுவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மக்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கும் நம்பிக்கையில்லா பிரேரணைகளில் கையொப்பமிடாத மற்றும் ஆதரவளிக்காத மக்கள் பிரதிநிதிகள் யார் என்பதை மக்கள் அடையாளம் காண முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version