இலங்கையின் மூத்த பெண் அறிவிப்பாளர்களில் ஒருவரான புவனலோஜினி நடராஜசிவம் இன்று(03.05) யாழ்ப்பணத்தில் காலமானார். உடல் நலகுறைவு காரணமாக யாழ்ப்பாணத்திற்கு சிகிச்சைக்காக சென்றிருந்த நிலையில் காலமாகியுள்ளார்.
நாளை(04.05) அன்னாரின் இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணத்தில் நடைபெறுமன அறியமுடிகிறது.
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராக தனது ஊடக பயணத்தை ஆரம்பித்தவர்ம் அறிவிப்பு, செய்தி வாசிப்பு, நாடகங்கள் என தனது திறமைகளை பல துறைகளிலும் வெளிக்காட்டியவர்.
பல இளம் அறிவிப்பாளர்களுக்கு பல்வேறு நிறுவனங்களிலும் பயிற்சிகளை வழங்கிய 50 வருடங்களுக்கும் மேற்பட்ட அனுபவத்தை உடைய இவர், பல்வேறு விருதுகளையும், கெளரங்களையும் வெற்றி பெற்றவர். இளையவர்களின் திறைமைகளை இனம்கண்டு பலருக்கும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.
இவருடைய கணவர் மூத்த அறிவிப்பாளர், நடிகர் நடராஜசிவம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் உடல் நல குறைவினால் காலமாகியிருந்தார்.
