மஹிந்த வெளிநாட்டிலா? திருகோணமலையிலா?

திருகோணமலையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தனது குடும்ப உறவுகளோடு திருகோணமலை கடற்படை முகாமில் மறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் திருகோணமலை கடற்படை முகாமுக்கு முன்னதாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இன்று அதிகாலை பாரளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் வெளிநாடு சென்றுள்ளதாக வெளிநாடுகளில் உள்ளவர்களினால் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இந்த விடயம் தொடர்பில் உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த தகவல் வதந்தியாக இருக்குமெனவும் கூறப்படுகிறது.

திருகோணமலை கடற்படை முகாமுக்கு உலங்கு வானூர்திகள் தொடர்ச்சியாக பயணித்தமையினை அடுத்து இந்த சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் கடற்படை முகாமில் பாதுகாப்புக்காக குடும்பத்ததோடு மறைந்திருக்க முடியுமென போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

மஹிந்த வெளிநாட்டிலா? திருகோணமலையிலா?
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version