30 வயத்துக்கு மேற்பட்ட தடுப்பூசிகளை பெறாதவர்களை உடனடியாக இந்த வாரத்துக்குள் பெற்றுக்கொள்ளுமாறு ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார். விரைவில் இறுதி திகதி ஒன்றும் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக தடுப்பூசிகள் போடும் நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது எனவும், தொடர்ந்தும் தடுப்பூசி மையங்களை திறந்து வைத்திருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
அநேகமாக பலர் தடுப்பூசிகளை பெற்று விட்டனர். சிலர் வேறு வேறு காரணங்களினால் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாமல் இருந்து வருகின்றனர். உடனடியாக அவர்கல் தடுப்பூசிகளை பெறவேண்டும்.
30வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்படுகின்றன. இனி அவர்கள் பக்கமாக அதிகம் கவனம் செலுத்தப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
