இடைக்கால அரசுக்கு ஆதரவு – JVP

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைப்பதற்கு எதிர்கட்சிக்கு ஆதரவு வழங்க தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அத்தோடு தாம் அரசை பொறுப்பேற்ற தயாராக இருப்பதாகவும் அனுரகுமார இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

எந்தவித நடவடிக்கைக்கு செல்வதானாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகவேண்டும் என்று நிபந்தையின் கீழாகவே அனைத்தும் சாத்தியம் என்பதனை தேசிய மக்கள் சக்தி தலைவர் வலியிறுத்தியுள்ளார். அதோடு 06 மாதங்களுக்கு மட்டுமே இவ்வாறான ஆதரவு எனவும், 06 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பதனையும் மேலுமொரு நிபந்தனையாக அவர் முன் வைத்துள்ளார்.

எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு வழங்குவதாக இருந்தால் தாம் அரசாங்கத்தில் பங்கெடுக்கமாட்டோம் எனவும், எதீர்க்கட்சியிலிருந்தே ஆதரவு வழங்குவோம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இடைக்கால அரசுக்கு ஆதரவு - JVP
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version