இன்று மாலை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்கும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க பதவியேற்கவுள்ளார் என்ற தகவல்களும், இன்னமும் அவர் முடிவு எதனையும் எடுக்கவில்லையெனவும் முரணான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
உத்தியோகபூர்வமாக உரிய தரப்புகள் உறுதி செய்யும் வரை மக்கள் உட்பட அனைவருக்குமே குழப்பமான நிலை தொடர்கிறது.
