ஜானதிபதி அழைத்தமையினால் பொறுப்பேற்றேன் – ரணில்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதரண சூழ்நிலையை தீர்த்து வைக்குமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க பிரதமர் பதவியினை ஏற்றுக்கொண்டதாக பிரதமர் ரணில் விக்ரம்சிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவியினை பொறுப்பேற்று, சமயவழிபாடுகளில் ஈடுப்பட்ட பின்னர் இந்த கருத்தினை அவர் வெளியிட்டுளளார். நாடு மிக மோசமான நிலையில் காணப்டுகிறது. அடுத்த இரண்டு மாதங்களும் மிகவும் கடினமானதாக அமையவுள்ளன. அவற்றை சரியான முறையில் கையாளவேண்டுமென கூறியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தனியாக நாம் மட்டும் தீர்க்க முடியாது. வெளிநாடுகள், சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் ஆதரவுடனே தீர்க்க முடியும். அவர்களது உதவி அவசியம் என்பதனையும் கூறியுள்ளார்.

மக்களுக்கு மூன்று வேளையும் சாப்பாட்டுக்கு வழி செய்வது, எரிபொருள், காஸ் பிரச்சினையை தீர்ப்பது முக்கியமா? அரசியல் செய்வது முக்கியமா என கேள்வியெழுப்பிய பிரதமர், பாராளுமன்றத்தில் சகல தரப்புகளிலிருந்தும் தனக்கு ஆதரவு கிடைக்குமெனவும், சகல கட்சிகளும் ஏற்பட்டுள்ள பிரச்சினையினை தீர்க்க உதவ வேண்டுமெனவும் கருத்து வெளியிட்டார்.

உடனடியாக அமைச்சரவையினை நியமிக்க முயடியாது எனவும், சனிக்கிழமை அமைச்சரவையினை நியமித்தல் செய்திகளுக்கு சரியாக அமையாது எனவும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு கிண்டலாக பதிலளித்தார்.

தான் பிரதமராக பதவியேற்க விருப்பமாக இருப்பதாக ஜனாதிபதி கூறியதாகவும், அவ்வாறில்லை எனவும், அவர் கேட்டுக்கொண்டதற்கிண்ணங்க தான் பொறுப்பேற்றதாகவும் மேலும் ரணில் தெரிவித்துள்ளார்.

நீங்கள் உருவாக்கிய பிரச்சினையே இது எனவும், கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குமாறு ஊடகங்களே உருவாக்கியதாகவும் சில ஊடகங்களை சுட்டி காட்டினார் ரணில் விக்ரமசிங்க.

ஜானதிபதி அழைத்தமையினால் பொறுப்பேற்றேன் - ரணில்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version