இலங்கையை பின்பற்றி பிரித்தானிய விமான நிலையத்திலும் வரிசை.

பிரித்தானியா, ஹீத்துரூ விமானநிலையத்தில் உரிய முகாமைத்துவமற்ற காரணத்தினால் விமான நிலையத்தில் இங்கிலாந்துக்கு சென்ற பயணிகள் பல மணி நேரமாக வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.

உலகத்துக்கு முகாமைத்துவம் பற்றி சொல்லிக்கொடுக்கும் நாட்டில் முகாமைத்துவம் இல்லாத நிலை காணப்படுகிறது. பல குடிவரவு கவுண்டர்கள் காணப்படுகின்ற போதும் சிறியளவிலானவர்களே கடமையில் ஈடுபட்டுள்ளனர். இதுவே பயணிகளை வெளியே அனுப்புவதற்கு பலமணி நேரம் எடுப்பதற்கான முக்கிய காரணம்.

பயணிகள் இவ்வாறான வரிசைகளில் காத்திருக்கின்றன வேளையில் கற்பிணித்தாய்மார்கள், கைகுழந்தைகளுடனான தாய்மார், வயோதிபர்கள் என எவருக்கும் தனி வரிசை முயோ, முன்னுரிமையோ வழங்கப்படவில்லை. மனித உரிமை தொடர்பிலும் மனித நேயம் தொடர்பிலும் உலக நாடுகளுக்கு வகுப்பெடுக்கும் இங்கிலாந்தில் இவ்வாறான நிலையா?

இலங்கை, ஐக்கிய அரபு இராட்சியம் போன்ற நாடுகளில் சரியான முகாமைத்துவமில்லை, இவ்வாறான மனித நேய செயற்பாடுகள் இல்லையென கூறும் இங்கிலாந்தவர்கள் மற்றையவர்களை குறை கூற முதலில் தங்களை பார்த்துக்கொள்ள வேண்டும்.

கொரோனோவின் பின்னரான காலப்பகுதியில், அதிகளவான பயணிகள் இங்கிலாந்துக்கு செல்லுகின்ற நிலையில் இங்கிலாந்து குவரவு, குடியகழ்வு திணைக்களம் உரிய மக்கள் முகாமைத்துவ ஏற்பாடுகளை செய்ய தவறியுள்ளமை அதிர்ச்சியளிக்கும் விடயமே.

இலங்கையை பின்பற்றி பிரித்தானிய விமான நிலையத்திலும் வரிசை.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version