ஜனாதிபதி மீது விருப்பமின்மை தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் முன்வைத்த பிரேரணை வாக்களிப்பில் தோல்வியடைந்துள்ளது.
பாராளுமன்ற நிலையியற் கட்டளையை இடைநிறுத்தி, ஜனாதிபதி மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் இந்த பிரேரணைக்கு ஆதரவாக 68 வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் வழங்கப்பட்டன. 51 வாக்குகளினால் சுமந்திரன் MP பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பிரேரணை தோற்கடிக்கப்பட்டதனால் அந்த பிரேரணை சபாநாயகரினால் நிராகரிக்கப்பட்டது.