பெற்றோலுக்காக நாளையதினம்(18.05) இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்கவேண்டாமென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
மட்டுப்படுத்தப்பட்ட விநியோகமே செய்யப்படவுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே பெற்றோல் வழங்கப்படவுள்ளது. நாளை மறுதினம்(19.05) வழமை போன்று பெற்றோல் விநியோகம் ஆரம்பிக்கப்படுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
