நடிகை வித்யுலேகா, கௌதம் வாசுதேவ் மேனனின் நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியிருந்தார்.
முதல் திரைப்படத்திலேயே தனது நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நகைச்சுவை நடிகையாக பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து தமிழில், தீயா வேலை செய்யனும் குமாரு, ஜில்லா, வீரம், புலி, பவர் பாண்டி, மாஸ், இனிமே இப்பிடித்தான், மாப்பிள சிங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளதுடன் தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவிலும் நடித்து வருகின்றார்.
உடல் எடை அதிகரித்ததற்காக பலரின் கிண்டல்களுக்கு மத்தியில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் தன்னம்பிக்கையை வரவழைத்து 20 கிலோகிராம் நிறையைக் குறைத்திருந்தார்.
இவர் கடந்த 09ம் திகதி (2021.09.09) சஞ்சை என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
