வவுனியா நகரில் மக்கள் வெள்ளம் – இது ஊரடங்கு நேரமா? வீடியோ இணைப்பு

வவுனியா நகரில் இன்று (21.09.2021) மிக அதிகமான மக்கள் கூட்டத்தினை அவதானிக்க முடிகிறது. மக்கள் வெள்ளம் என கூறகூடிய நிலையே காணபப்டுகிறது.

வீதியோர கடைகள் ஏரளாமாக திறக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சந்தையினை அண்மித்த குடியிருப்பு ஆரம்ப பகுதியில் மரக்கறி வியாபார நிலையங்கள் புதிதாக திறக்கப்பட்டு ஏராளாமான மக்கள் பாதுகாப்பின்றி பொருட்களை வாங்குவதனை அவதானிக்க முடிந்தது.

இந்த புதிய கடைகள் தொடர்பில் நகரசபை தலைவர் கெளதமனை தொடர்பு கொண்டு கேட்ட போது தாங்கள் புதிதாக கடைகளை திறக்கவோ, வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ அனுமதியளிக்கவில்லை என தெரிவித்தார்.

வழமை போன்றே மூடிய நிலையில் பல கடைகளில் வியாபார நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. பொலிசார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்ட, அவர்களுக்கு திறந்துளளதாக தெரியும் கடைகளை மூட செய்கின்றனர். பொலிசார் சென்றதும் கடைகள் மீள தங்களது செயற்பாடுகளை ஆரம்பிக்கின்றன.

வங்கிகள் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. வங்கிகளுக்கு வெளியே உள்ளவர்கள் எந்தவித பாதுகாப்புமின்றி மிக நெருக்கமாக வரிசையில் நிற்கின்றனர். வீதிகளில் கூட்டமாக மக்கள் நிற்பதையும், வீதிகளில் இணைந்து சுற்றி திரிவதனையும் சாதாரணமாக பார்க்க கூடியதாக உள்ளது.

சில இடங்களில் பொலிசார் சோதனைகளை செய்கின்றனர். சில இடங்களில் அவர்களும் நடப்பவற்றை வேடிக்கை பார்துக்கொண்டுள்ளனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் இவற்றை பெரியளவில் பொருட்படுத்துவதாக இல்லை.
அவதானமாக இருக்க வேண்டிய மக்கள் அவதனாமின்றி இருந்தால் கொரோனா தொற்றுக்கு இலக்காக வேண்டிய நிலை ஏற்படும். வவுனியாவில் கொரோனா மரணங்கள் இன்னமும் குறைவடையவில்லை என்பதனை மக்கள் உணர தவறி வருகின்றனர்.

தங்களை தாங்களே பாதுகாக்க வேண்டும்.

ஊரடங்கு நேரத்தில் மக்கள் வெள்ளம். போறுப்பற்ற வியாபாரிகளும் மக்களும்.
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version