மீண்டும் வெற்றியில் ட்ரூடோ

கனடா நாட்டின் 44வது பொதுத்தேர்தல் ஆரம்பமாகி தேர்தல் பெறுபேறுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ட்ரூடோ வெற்றி பெற்றுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பான்மையளவில் வெற்றி பெறாவிட்டாலும் தற்போது தேர்தலில் ட்ரூடோ வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பான்மை வெற்றிக்கு 170 ஆசனங்கள் தேவைப்படும் நிலையில் லிபரல் கட்சி 156 தற்போது ஆசனங்களுடன் முன்னிலையில் உள்ளதாகவும் கன்சர்வேடிவ் கட்சி 121 ஆசனங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளதாவும் அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரு தேர்தல்களிலும் வெற்றி பெற்று பிரதமராக தெரிவு செய்யப்பட்ட ஜஸ்ரின் ட்ரூடோ தனது லிபரல் கட்சியில் இவ்வருடமும் போட்டியிட்டிருந்தார்.

எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியில் போட்டியிடும் எரின் ஓருல் இற்கும் லிபரல் கட்சிக்குமிடையே கடும் போட்டி நிலவுவதுடன் இம் முறை கன்சர்வேடிவ் கட்சி முன்னிலை வகிப்பதாக கனடா நாட்டின் கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்தன.

ஏற்கனவே 2015 மற்று 2019ம் ஆண்டுத் தேர்தல்களில் வெற்றிபெற்று இரு தடவைகள் பிரதமர் பதவி வகித்துள்ள ஜஸ்ரின் ட்ரூடோ தற்போது மூன்றாவது தடவையாகவும் வெற்றி பெற்றுள்ளார்.

உள்நாட்டின் படி போட்டி அதிகரித்திருந்தாலும் வெளிநாடுகளில் ட்ரூடோவிற்கு ஆதரவு வழங்கி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மீண்டும் வெற்றியில் ட்ரூடோ
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version