இந்தியா, தமிழ் நாட்டில் இந்திய பண மதிப்பீட்டின் படி 31,500 கோடி ரூபா பெறுமதியிலான 11 வேலைத்திட்டங்களை இந்திய பிரதமர் மோடி ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வு நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்டமாக நடைபெற்றுளளது. இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழக சட்டசபை உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இந்த நிகழ்வில் பங்கேற்னர்.
ரயில்வே துறை, தேசிய நெடுஞ்சாலை, பெட்ரோலியம், நீர் விநியோகம், சமையல் எரிவாயு விநியோகம், மற்றும் வீட்டு வசதி சார்ந்த திட்டங்கள் என 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு கட்டமைப்பு செயல் திட்டங்களை நாட்டுக்கு உத்தியோகபூர்வமாக பிரதமர் நரேந்திர மோடி கையளித்தார்.
தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியமைத்து, மு.க ஸ்டாலின் முதலமைச்சராக பதிவியேற்ற பின்னர் தமிழகத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளமை இதுவே முதற் தடவையாகும்.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் பதவியேற்றிருந்தார்.
ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களும் பெறுமதிகளும். (பெறுமதி இந்திய ரூபாய்)
- ₹598 கோடியில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3வது ரயில்வே வழித்தடம்
- ₹116 கோடியில் கலங்கரைவிளக்கம் செயல் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 1152 வீடுகள்
- ₹506 கோடியில் மதுரை-தேனி ரயில்வே வழித்தடம் (கேஜ் மாற்ற செயல் திட்டம்)
- ₹849 கோடியில் இயற்கை எரிவாயு குழாய் வழியின் எண்ணூர் -செங்கல்பட்டு பிரிவு
- ₹911 கோடியில் இயற்கை எரிவாயு குழாய் வழியின் திருவள்ளூர்-பெங்களூரு பிரிவு
- ₹14,872 கோடியில் சென்னை-பெங்களூரு விரைவு வழி சாலை
- ₹3871 கோடியில் தேசிய நெடுஞ்சாலை 844ன் நெரலூருவிலிருந்து தர்மபுரி பிரிவு 4 வழி
- ₹724 கோடியில் தேசிய நெடுஞ்சாலை 227ன் மீன்சுருட்டி முதல் சிதம்பரம் வரையிலான பிரிவு
- ₹1428 கோடியில் சென்னையில் பல்வகை வழிமுறைகளுடன் கூடிய சரக்கக பூங்கா
- ₹5852 கோடியில் துறைமுகத்தையும் மதுரவாயலையும் இணைக்கும் நான்கு வழி 2 அடுக்கு மேல்நிலை சாலை
- ₹1803 கோடியில் சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ஆகிய 5 ரயில் நிலையங்களுக்கு மறு உருவாக்கம்.
