டெஸ்ட் தொடரை வென்றது இலங்கை

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரை இலங்கை அணி 1 – 0 என வெற்றி பெற்றுள்ளது.

பங்களாதேஷில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 29 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் இரண்டாம் இன்னிங்சில் துடுப்பாடிய இலங்கை அணி 10 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. ஒஷாத பெர்னாண்டோ 21 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

ஐந்தாம் நாளான இன்று 4 விக்கெட் இழப்பிற்கு 34 ஓட்டங்கள் என்ற ஓட்ட எண்ணிக்கையோடு இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி சகல விக்கெட்களையும் இழந்து 169 ஓட்டங்களை பெற்றது. இதில் ஷகிப் அல் ஹசன் 58 ஓட்டங்களையும், லிட்டன் டாஸ் 52 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அஷித பெர்னாண்டோ 6 விக்கெட்களையும், கஸூன் ரஜித 2 விக்ட்களையும் கைப்பற்றினார்கள்.

அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் டினேஷ் சந்திமால் ஆகியோரது சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலம் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 506 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

மத்தியூஸ் சந்திமால் ஆகியோர் ஆறாவது விக்கெட் இணைப்பாட்டமாக 199 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர். இதில் மத்தியூஸ் 145 ஓட்டங்களையும், சந்திமால் 124 ஒட்டங்களையும் பெற்றனர். அணித்தலைவர் டிமுத் கருணாரட்ன 80 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 58, ஒசாத பெர்னாண்டோ 57 ஓட்டங்களையும் பெற்றனர்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் ஷகிப் அல் ஹசன் 5 விக்கெட்களையும், எபடொட் ஹொசைன் 4 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்சில் 365 ஓட்டங்களை பெற்றது. பங்களாதேஷ் அணி இரண்டாம் இன்னிங்ஸ் போன்றே வேகமாக விக்கெட்களை இழக்க தற்போது இரண்டாம் இன்னிங்சில் காணப்படும் முஸ்ஃபிகீர் ரஹீம், லிட்டன் டாஸ் ஜோடி 272 ஓட்டங்களை பகிர்ந்து அணியினை காப்பாற்றியது. முஸ்ஃபிகீர் ரஹீம் ஆட்டமிழக்கமால் 175 ஓட்டங்களையும், லிட்டன் டாஸ் 141 ஒட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் கஸூன் ரஜித்த 5 விக்கெட்களையும், அஷித பெர்னாண்டோ 4 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

டெஸ்ட் தொடரை வென்றது இலங்கை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version