தமிழகத்தின் 2ம் கட்ட நிவாரண பொருட்கள் தயாராகின்றன.

தூத்துக்குடி துறைமுகம் வழியாக இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி நிவாரண பொருட்கள் பொதி செய்யப்பட்டு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் அந்த பணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பார்வையிட்டுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு தமிழக அரசு நிவாரண பொருட்களை ஏற்கனவே சென்னையில் இருந்து அனுப்பி அந்த பொருட்கள் இலங்கை அரசிடம் கையளிக்கபப்ட்டுள்ளன.

அதன் இன்னுமொரு பகுதியாக, தமிழகத்தின் புதுக்கோட்டை, நெல்லை,திருச்சி, திருவண்ணாமலை சிவகங்கை, மதுரை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள 70 அரிசி ஆலைகள் மூலம் தூத்துக்குடி களஞ்சிய சாலைக்கு கொண்டுவரப்பட்ட வஅரிசி தொகுதிகளே பொதி செய்யப்பட்டு வருகின்றன.

இதில் சென்னையில் இருந்து அனுப்பப்பட்ட 7 ஆயிரத்து 500 தொன் அரிசியுடன் சேர்த்து தூத்துக்குடியிலிருந்து 32 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் அரிசி என மொத்தம் 80 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான அரிசிகள், 28 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து பொருட்கள், 15 கோடி ரூபாய் மதிப்பிலான 500 மெட்ரிக் டன் பால் மா ஆகிய பொருட்கள் தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

தூத்துக்குடி துறைமுகம் வழியாக இந்த பொருட்கள் அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் கலாநிதி செந்தில்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த பொருட்கள் துறைமுகம் வழியாக விரைவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார்.

தமிழகத்தின் 2ம் கட்ட நிவாரண பொருட்கள் தயாராகின்றன.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version