பிரிந்தவர்கள் சந்திப்பு.

சுற்றுலா துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும், சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் தலைவருமான கிர்மாலி பெர்னாண்டோ ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு சிறப்பானதாக அமைந்ததாகவும், எதிர்காலத்தில் முன்னாள் தலைவரோடு இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பிலும் பேசப்பட்டதாக சுற்றுலா துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோ பதவியேற்ற வேளையில், இரண்டு தடவைகள் சுற்றுலா துறையின் நிலைவரம் தொடர்பில் விளக்கமளிப்பதற்கான கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்ட போதும் சுற்றுலா துறை அமைச்சரினால் இரத்து செய்யப்பட்டதாகவும், அமைச்சரின் தவறான அணுகுமுறை காரணமாக தான் பதவி விலகுவதாக தெரிவித்து கிர்மாலி பெர்னாண்டோ பதவியினை இராஜினாமா செய்திருந்தார்.

இவ்வாறான நிலையியேயே இந்த சந்திப்பு இருவருக்குமிடையில் நடைபெற்றுள்ளது. எதிர்காலத்தில் எவ்வாறு இணைந்து செயற்பட போகிறார்கள் என்பது தொடர்பில் எந்த தகவல்களையும் இருவரும் வெளியிடவில்லை. சில வேளைகளில் கிர்மாலி பெர்னாண்டோ சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பொறுப்பினை மீண்டும் ஏற்றுக்கொள்வாரா என்று சந்தேகம் இந்த சந்திப்பின் மூலம் தோன்றியுள்ளது.

தொடர்புடைய செய்தி

பிரிந்தவர்கள் சந்திப்பு.

Social Share

Leave a Reply