காலி, அகங்கம பகுதியில் ஒருவர் நேற்று சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். 27 வயதான டிக்வெல்ல பகுதியினை சேர்ந்த இளைஞர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார்.
சிறை தண்டை விதிக்கப்பட்ட குற்றவாளியான இவர், பிணையில் வெளியே வந்திருந்த நிலையிலேயே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். போதை கடத்தலுடனான தொடர்பில் இவர் கொல்லப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.