போதைப்பொருள் அச்சுறுத்தலால் பூங்கொத்தைப் போல மேலும் ஒரு சிறுமி துரதிர்ஷ்டவசமாக கொல்லப்பட்டதாகவும், போதைப் பொருள் முற்றாக அழிக்கப்படும் வாராய் இதுபோன்ற அவலங்கள் ஓயாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
பண்டாரகம அட்டலுகம பெரியபள்ளிக்கு முன்பாக வசித்து வந்த துரதிஷ்டவசமாக கொல்லப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் வீட்டுக்கு நேற்று (04.06) சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அச் சிறுமியின் குடும்பத்தினரிடம் தனது துயரத்தை பகிர்ந்து கொண்டார்.
தற்போது தேசிய பாதுகாப்பு என்பதற்கு பகிரங்கமாக ஆங்காங்கே கொலைகள் இடம் பெறுவதையே காணக் கூடியதாகவுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், முக்கிய வழக்குகளின் சாட்சிகளும் கூட கொல்லப்பட்டுவருவதாகவும் பண்டாரகமையில் வைத்து தெரிவித்துள்ளார்.
இந்த உணர்ச்சிகரமான தருணத்தில் எதிர்காலத்திற்கு குறிப்பிட்டளவு பக்கபலமாக இருக்கும் பொருட்டு, மறைந்த சிறுமி பாத்திமா ஆசியாவின் தாயாரான அமீர் மும்தாஸ் பேகத்திற்கு நிநியுதவிகளை வழங்கி வைத்த எதிர்க்கட்சித் தலைவர்,எதிர்காலத்திலும் குடும்பத்திற்கு பக்கபலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.