ரஸ்சியா விமான சேவையான ஏரோபுளோட் விமானம் தடை செய்யப்பட்டுள்ளமை, நாடுகளுக்கு இடையிலான பிரச்சினை அல்ல எனவும், தனிப்பட்ட நிவனங்களுக்கிடையிலான பிரச்சினை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ரஸ்சியா அரசாங்கத்துக்கு, இலங்கை வெளியுறவு துறை அமைச்சு மூலமாக அறிவித்துள்ளார்.
ரஸ்சியா விமானம் ஏரோபுளோட் இலங்கை வர்த்தக நீதிமன்றத்தினால் பயணிக்க முடியாமல் கடந்த 02 ஆம் திகதி தடை செய்யப்பட்டுள்ளது. ஜூன் 16 ஆம் திகதி வரையுமான காலப்பகுதிக்கு இந்த தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஏரோபுளோட் நிறுவனம் இலங்கைக்கான வர்த்தக விமானங்கள் அனைத்தையும் நிறுத்தியுள்ளன. ஏரோபுளோட் ரஸ்சியாவின் விமான சேவை.
இராஜதந்திர முறையில் இந்த பிரச்சினை தீர்க்கப்படவேண்டுமென வெளியுறவு துறை அமைச்சு இந்த விடயம் தொடர்பிலான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
ஐரிஷ் நிறுவனமான பிளைன்டிப் செலஸ்டியல் ஏவியேஷன் ட்ரேடிங் 10 நிறுவனம், ஏரோபுளோட் மற்றும் விமான நிலைய விமான சேவைகள் பிரதி தலைவர் N.C அபேயவர்தன ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கின் இறுதி முடிவு நீதிமன்ற முடிவுகளில் தங்கியுள்ளது. இருந்தாலும் இந்த சிக்கலை தீர்ப்பதற்கு சாதரண இராஜதந்திர மட்டங்களிலும் பேச்சுவாத்தைகள் நடைபெறுகின்றன என வெளியுறவு துறை அமைச்சின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுளள்து.
இந்த பிரச்சினை ஐரிஸ் நிறுவனத்துக்கும், ஏரோபுளோட் நிறுவனத்துக்குமான பிரச்சினை. ஆனாலும் இலங்கை அரச தரப்புகள் தலையிட்டது தொடர்பிலேயே ரஸ்சியா தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தது.
ஏரோபுளோட் நிறுவனம் இலங்கைக்கான விமான சேவைகளை நிறுத்தியுள்ள அதேவேளை டிக்கட்டுகள் விநியோகப்பதனையும் நிறுத்தியுள்ளது. இந்த பிரச்சினையை உடனடியாக தீர்த்து இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவில் எதிர்மறையான கருத்து ஏற்படுவதனை தவிர்க்குமாறு ரஸ்சியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.