கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது 20-20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி இலகுவான 10 விக்கெட்களினாலான வெற்றியினை பெற்றுக் கொண்டது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகளடங்கிய தொடரில் அவுஸ்திரேலியா அணி 1- 0 என முன்னிலை பெற்றுள்ளது.
இலங்கை அணி சிறப்பான ஆரம்பத்தை பெற்ற போதும் மத்திய தர வரிசை வீரர்கள் தொடர்ச்சியாக ஆட்டமிழந்தது இலங்கை அணிக்கு பாரிய பின்னடைவை வழங்கியது. 28 ஓட்டங்களுக்கு இறுதி ஒன்பது விக்கெட்களை இழந்ததன் காரணமாக இலங்கை அணி 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 128 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது.
இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களின் பொறுமையற்ற, நுட்பமற்ற துடுப்பாட்ட பிரயோகங்களே இந்த குறைந்த ஓட்ட எண்ணிக்கைக்கு காரணமாக அமைந்தது.
அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் ஜோஸ் ஹெசல்வுட் மிக அபாரமாக பந்து வீசி இலங்கை அணியின் விக்கெட்களை கைப்பற்றினார். நான்கு விக்கெட்களை அவர் கைப்பற்றினார்.
அவுஸ்திரேலிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான அணியின் தலைவர் ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் அதிரடியாக அடித்தாடி வெற்றியினை ஓவர்களில் பெற்றுக் கொடுத்தனர்.
ஸ்கோர் விபரம்.
துடுப்பாளர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 6 | 4 |
ஆரோன் பின்ச் | 61 | 40 | 4 | 4 | ||
டேவிட் வோர்னர் | 70 | 44 | 9 | 0 | ||
உதிரிகள் | 03 | |||||
ஓவர் –14 | விக்கெட் –00 | மொத்தம் | 134 |
பந்துவீச்சாளர் | ஓவர் | ஓ.ஓ | ஓட்டம் | விக்கெட் |
மகேஷ் தீக்க்ஷன | 04 | 00 | 25 | 00 |
நுவன் துஷார | 02 | 00 | 21 | 00 |
துஷ்மந்த சமீர | 04 | 00 | 48 | 00 |
வனிந்து ஹசரங்க | 02 | 00 | 27 | 00 |
சமிக்க கருணாரட்ன | 02 | 00 | 13 | 00 |
துடுப்பாளர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 6 | 4 |
தனுஷ்க குணதிலக்க | பிடி,மிட்செல் மார்ஷ் | ஜோஷ் ஹெசல்வுட் | 26 | 15 | 3 | 1 |
பதும் நிஸ்ஸங்க | Bowled | மிட்செல் ஸ்டார்க் | 36 | 31 | 2 | 1 |
சரித் அசலங்க | Run Out | 38 | 34 | 3 | 1 | |
குசல் மென்டிஸ் | பிடி,அஷ்டன் எகர் | ஜோஷ் ஹெசல்வுட் | 01 | 05 | 0 | 0 |
பானுக ராஜபக்ஷ | பிடி, மத்யூ வேட் | ஜோஷ் ஹெசல்வுட் | 00 | 01 | 0 | 0 |
தஸூன் ஷானக | L.B.W | ஜோஷ் ஹெசல்வுட் | 00 | 02 | 0 | 0 |
வனிந்து ஹசரங்க | பிடி, | மிட்செல் ஸ்டார்க் | 17 | 15 | 2 | 0 |
சமிக்க கருணாரட்ன | Run Out | 01 | 02 | 0 | 0 | |
தஷ்மந்த சமீர | பிடி, வோர்னர் | கேன் ரிச்சர்ட்சன் | 01 | 05 | 0 | 0 |
மகேஷ் தீக்க்ஷன | பிடி, வோர்னர் | கேன் ரிச்சர்ட்சன் | 01 | 04 | 0 | 0 |
நுவன் துஷார | 00 | 03 | 0 | 0 | ||
உதிரிகள் | 07 | |||||
ஓவர் 19.3 | விக்கெட் 10 | மொத்தம் | 128 |
பந்துவீச்சாளர் | ஓவர் | ஓ.ஓ | ஓட்டம் | விக்கெட் |
மிட்செல் ஸ்டார்க் | 04 | 00 | 26 | 03 |
ஜோஷ் ஹெசல்வுட் | 04 | 00 | 16 | 04 |
மிட்செல் மார்ஷ் | 02 | 00 | 21 | 00 |
கிளென் மக்ஸ்வெல் | 02 | 00 | 18 | 00 |
கேன் ரிச்சர்ட்சன் | 03.3 | 00 | 22 | 01 |
அஷ்டன் எகர் | 04 | 00 | 25 | 00 |
————————-
முதல் இன்னிங்ஸ்
இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது 20-20 போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பித்து நடைபெற்று வருகிறது.
இலங்கை அணி சிறப்பான ஆரம்பத்தை பெற்ற போதும் மத்திய தர வரிசை வீரர்கள் தொடர்ச்சியாக ஆட்டமிழந்தது இலங்கை அணிக்கு பாரிய பின்னடைவை வழங்கியது. அதன் காரணமாக 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 128 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது.
இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களின் பொறுமையற்ற, நுட்பமற்ற துடுப்பாட்ட பிரயோகங்களே இந்த குறைந்த ஓட்ட எண்ணிக்கைக்கு காரணமாக அமைந்துள்ளது. 28 ஓட்டங்களுக்கு இறுதி ஒன்பது விக்கெட்களை இழந்தது இலங்கை அணி
அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் ஜோஸ் ஹெசல்வுட் மிக அபாரமாக பந்துவீசி இலங்கை அணியின் விக்கெட்களை கைப்பற்றினார்.
பலமான, அதிரடியான அவுஸ்திரேலியா துடுப்பாட்ட வீரர்கள் இந்த வெற்றியிலக்கை பெறாமல் தடுப்பது இலகுவானதல்ல.
—————————-
நாணய சுழற்சி
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாஅணிகளுக்கிடையிலான முதலாவது 20-20 போட்டிக்கான நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியாஅணி வெற்றி பெற்று களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
கொழும்பு ஆர். பிரேமதச மைதானத்தில் இந்த போட்டி ஆரம்பித்துள்ளது. கடந்த பல நாட்களாக கொழும்பில் மழை பெய்த போதும், இன்று குளிரான வானிலை காணப்படுகின்ற போதும் மழைக்கான வாய்ப்புகள் இதுவரை தென்படவில்லை.
அணி விபரம்
இலங்கை அணி – 1 தனுஷ்க குணதிலக்க, 2 பதும் நிஸ்ஸங்க, 3 சரித் அசலங்க, 4 குசல் மென்டிஸ் (வி.கா), 5 பானுக ராஜபக்ஷ, 6 தஸூன் ஷானக (தலைவர்), 7 வனிந்து ஹசரங்க, 8 சமிக்க கருணாரட்ன, 9 நுவன் துஷார, 10 துஷ்மந்த சமீர, 11 மகேஷ் தீக்க்ஷன
அவுஸ்திரேலியா உத்தேச அணி – 1 ஆரோன் பின்ச் (தலைவர்), 2 டேவிட் வோர்னர், 3 மிட்செல் மார்ஷ், 4 கிளென் மக்ஸ்வெல், 5 ஸ்டீவன் ஸ்மித், 6 மார்கஸ் ஸ்டோய்னிஸ், 7 மத்யூ வேட் (வி .கா), 8 எஷ்டன் எகர், 9 மிட்செல் ஸ்டார்க், 10 கேன் ரிச்சர்ட்சன், 11 ஜோஷ் ஹெசல்வுட்