வவுனியா மாவட்டத்தில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் ஏற்கனவே சுகாதர துறை அறிவித்தது போன்று இந்த வாரம் ஆரம்பமாகியுள்ளது.
ஆனால் வவுனியா சுகாதர பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் இன்னமும் நிறைவடையாத நிலையிலேயே இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது.
20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரும் வாரம் தடுப்பூசிகள் ஏற்றப்படும் வாய்ப்புகள் உள்ளதாக சுகாதர துறை தெரிவித்துள்ளது. அநேகமாக 27 ஆம் திகதி தடுப்பூசிகள் ஏற்றப்படுவதற்கான வாய்ப்புகளுள்ளன.
வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு, செட்டிகுளம் சுகாதர பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் நடைபெறுகின்றன. குறித்த பகுதிகளிலுள்ளவர்கள் கிராமசேவையாளர் ஊடக உடனடியாக தடுப்பூசிகளை ஏற்றி கொள்ள முடியும்.
வவுனியாவில் 20 வயதுக்கு மேல் உள்ள தொகை 112752. இதுவரையில் 90,071 பேர் முதல் தடுப்பூசிகளை ஏற்றியுள்ளனர். இது 79.88% ஆகும். இரண்டாவது தடுப்பூசிகளை 60,714 பேர் ஏற்றியுள்ளனர். இது 53.85% ஆகும். தொடந்தும் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வரும் நிலையில் இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும்.