காணமலாக்கப்பட்டோரின் ஆட்கொணர்வு மனு வழக்கு தீர்ப்பு திகதி

இறுதி யுத்தத்தில் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக அனந்தி சசிதரன் உட்படடோரால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் ஜீலை முதலாம் திகதி வழங்கப்படவுள்ளதாக சிரேஸ்ட சட்டத்திரணி இரட்ணவேல் தெரிவித்தார்.

இன்றைய தினமே வவுனியா மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில், மீண்டும் திகதி இடப்பட்டுள்ளது.

“யுத்தத்தின் கடைசிப்பகுதியில் சரணடைந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் சம்பந்தமான வழங்கின் தீர்ப்பு வவுனியா மேல் நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட இருந்தபோதிலும் தவிர்க்க முடியாத காரணத்தினால் எதிர்வரும் 7 ஆம் மாதம் முதலாம் திகதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என நீதிமன்றத்தினால் கூறப்பட்டுள்ளது. ஆகவே ஜுலை மாதம் முதலாம் திகதி நாம் தீர்ப்புக்காக காத்திருக்கின்றோம்” என இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் தெரிவித்தார்.

காணமலாக்கப்பட்டோரின் ஆட்கொணர்வு மனு வழக்கு  தீர்ப்பு திகதி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version