IMF திட்டங்கள் – பிரதமர் நம்பிக்கை வெளியிடடார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அலுவலக மட்ட ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்தாகுமென பிரதமர் நம்பிக்கை.

சர்வதேச நாணய நிதியத்துடன் அலுவலக மட்ட ஒப்பந்தம் கைச்சாத்திடப்பபடுமெனவுவம், கடன்களிலிருந்து விடுபடும் திட்டம் நிறைவு செய்யப்படுமெனவும் பிரதமர் ரணில் விக்கரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச நாணய பிரதிநிதிகளுக்கும், பிரதமருக்குமிடையிலான சந்திப்பு நேற்றைய தினம் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் பின்னரே இந்த நம்பிக்கையினை பிரதமர் வெளியிட்டுள்ளார்.

இந்த சந்திப்பில் மத்திய வங்கி ஆளுனர், நிதியமைச்சின் செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கையில் பொருளாதரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து மிக மோசமான வீழ்ச்சியாக இது கருதப்படுகிறது. இலங்கை கடன்களை மீள செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோரியுள்ளது.

அதனடிப்படையில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் 10 பேரடங்கிய குழு நேற்று இலங்கை வந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் சந்திப்பை மேற்கொண்டுள்ளனர். 10 நாட்களுக்கு அவர்காது சந்திப்புக்கள், கலந்துரையாடல்கள் பல்வேறு தரப்பினருடனமும் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

ஜூன் 30 வரை இலங்கையில் தாம் தங்களது செயற்பாடுகளை முன்னெடுக்கவிருப்பதாகவும், இலங்கை மோசமான சூழிநிலையில் காணபப்டுவதனால் அவர்களது கடினமான காலப்பகுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் கொள்களைக்கு உட்பட்டு இயலுமான உதவிகளை செய்ய முயற்சிப்பதாகவும் சர்வதேச நாணய நிதியம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

IMF திட்டங்கள் - பிரதமர் நம்பிக்கை வெளியிடடார்.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version