குருந்தூர்மலை, விகாரை விவகாரத்தில் தலையிட்டால் சுடப்படுவீர்கள் என அச்சுறுத்தல்.

குருந்தூர் மலையில் விகாரை அமைத்து, புத்தர் சிலை அமைப்பதற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட நபருக்கு, அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால், சுடப்படுவீர்கள் என துப்பாக்கி முனையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் சமூக செயற்பாட்டாளரும், முன்னாள் போராளியுமான இரண்டாம் வட்டாரம் புதுக்குடியிருப்பு பகுதியில் வசித்து வருகின்ற வேலுப்பிள்ளை மாதவமேஜர், என்பவரது வீட்டிற்கு 15ம் திகதி இரவு வேளையில் சென்ற 2 பேர் துப்பாக்கி முனையில் தன்னை அச்சுறுத்தியதாக தெரிவித்து அவர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த 12 ஆம் திகதி குருந்தூர் மலையில் ஆதிசிவன் ஐய்யனார் ஆலயம் இருந்த பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த விகாரை அமைக்கப்பட்டு சிலை பிரதிஷ்டை நிகழ்வு இடம்பெறவிருந்ந நிலையில் அதனை தடுப்பதற்காக மக்கள் மற்றும் அரச பிரதிநிதிகளினால் போராட்டம் நடாத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் அங்கு வருகை தந்த சிங்கள மக்கள் மத்தியில் சிங்கள மொழி தெரிந்த காரணத்தால் தான் அவர்களுடைய மொழியில் அவர்களுக்கு சில தகவல்களை வழங்கியிருந்ததாகவும் தெரிவித்துள்ள மாதவமேஜர்,

குறித்த விடயங்களை முன்னிறுத்தி கடந்த 15 ம் திகதி அதிகாலை 1.30 மணிக்கு கைத்துப்பாக்கியுடன் எனது வீட்டுக்கு முன்னால் வந்த இரண்டு நபர்கள் எனது தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டல் விடுத்ததாகவும், தங்களுடைய பௌத்த கலாசரத்தை அழிக்க முயல்வதாகவும் அன்றைய போராட்டத்தை தானே தலைமை தாங்கி நடத்தியதாகவும், இனிவரும் காலங்களில் இந்த விடயங்களில் தலையிட கூடாது எனவும் அவ்வாறு தலையிட்டால் தாங்கள் என்னை சுடுவோம் என்றும் மிரட்டியதாகவும் மேலும் தெரிவிந்தார்

இவ்வாறு அவர்கள் வந்து மிரட்டல் விடுத்த வேளையில் தனது அம்மா வந்த நிலையில் குறித்த நபர்கள் தனது வீட்டுக்கு முன்னால் உள்ள பற்றை காடுகள் ஊடாக 682 ஆவது படைப்பிரிவு முகாமுக்குள் ஒடியிருப்பார்கள் என தான் சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளார்

இவர்களுடைய நோக்கம் தன்னைப் போன்ற செயற்ப்பாட்டாளர்களை அடக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

குருந்தூர்மலை, விகாரை விவகாரத்தில் தலையிட்டால் சுடப்படுவீர்கள் என அச்சுறுத்தல்.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version