ஆப்கானிஸ்தானில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1000 ஐ அண்மித்துள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுவரை இறந்தவர்களது எண்ணிக்கை 950 ஐ தாண்டியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 6.1 அளவில் பதிவு செய்யப்பட்ட நில நடுக்கத்தில் 600 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இழப்புகள் மேலும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
வீடுகள், கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்து மண்ணாகி போயுள்ளதாகவும், பல இறந்த உடல்கள் துணிகளினால் சுற்றப்பட்டு நிலத்தில் படுக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறப்புகள் மேலும் அதிகரிக்கும் எனவும், மலையடி வாரங்கள், பின்தங்கிய கிராமங்களில் இன்னமும் முறையான மீட்பு பணிகள் நடைபெறவில்லையெனவும் தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான் உள்நாட்டு அமைச்சர் ஷலாகுதீன் அயூபி தெரிவித்துள்ள அதேவேளை, உலங்குவானூர்தி மூலம் உணவுப் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படுவதுடன் மீட்பு பணிகளும் நடைபெறுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2002 ஆம் ஆண்டின் பின்னர் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நில நடுக்கத்துக்கு பின்னர் ஏற்பட்ட பாரிய நில நடுக்கமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு மாவட்டமான கோஷ்ட் எனும் பாகிஸ்தானுக்கு அண்மித்த பகுதியிலேயே இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தலிபான்கள் நாட்டை கைப்பற்றியது முதல் வெளிநாட்டு உதவிகள் ஆப்கானிஸ்த்தில் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறன சூழ்நிலையில் மக்கள் மேலும் பாதிப்புகளை சந்திக்க நேரிடலாமென சர்வதேச செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான் நாட்டிலிலும், பாகிஸ்தானின் அநேகமான பகுதிகளிலும், இந்தியாவிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் சேத விபரங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.
