எரிபொருள் வரிசையில் மரணம்

எரிபொருளுக்காக காத்திருந்த 63 வயது நபர் ஒருவர் இன்று மரணித்துள்ளார். களுத்துறை, பத்தேகொட எனும் பகுதியில், தனது வாகனத்துக்கு டீசல் பெறுவதற்காக கடந்த ஐந்து தினங்களாக வரிசையில் காத்திருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார். அவருடைய டிப்பர் ரக வாகனத்தினுள்ளே இறந்த நிலையில் பொலிசாரால் அவரது உடல் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் வரிசையில் இறந்தவர்களது எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது. 43-84 வயதுக்கு உட்பட்டவர்களே இறந்துள்ளனர். அனைவருமே மாரடைப்பு காரணமாகவே இறந்துள்ளனர்.

எரிபொருள் வரிசையில் மரணம்
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version