சேவைகளை மட்டுப்படுத்தும் இரண்டு திணைக்களங்கள்

பதிவாளர் நாயகம் திணைக்களம் தமது சேவைகளை இரண்டு தினங்களுக்கும், தபால் திணைக்களம் தமது சேவைகளை மூன்று தினங்களுக்கு மட்டுப்படுத்துவதாகவும் அறிவித்துள்ளன. ஜூலை 10 ஆம் திகதி வரை இந்த மட்டுப்படுத்தல் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பிறப்பு, இறப்பு பதிவுகள் மற்றும் காணி பதிவுகளை பிரதேச செயலகம் ஊடக பதிவு செய்தல் மற்றும் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் திங்கட்கிழமை மற்றும் புதன் கிழமைகளில் மட்டுமே நடைபெறும் எனவும், காலை 8.30 மணி முதல் மாலை 4.00 மணி வரையுமே நடைபெறுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, பத்தரமுல்லை ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு கொழும்பு, கண்டி, மாத்தறை, குருநாகல், வவுனியா ஆகிய இடங்களில் அமைந்துள்ள கடவுச் சீட்டு வழங்கும் குடிவரவு, குடியகல்வு திணைக்கள செயற்பாடுகள் வழமை போல தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தபால் திணைக்களத்தின் சேவைகள் செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் இடம்பெறுமென தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

சேவைகளை மட்டுப்படுத்தும் இரண்டு திணைக்களங்கள்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version