-அகல்யா டேவிட்-
இன்றைய தினம் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதாக குற்றம்சாட்டி கைது செய்யபப்ட்ட, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மாலை வேளையில் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலை புலிகளின் உறுப்பினர் திலீபனை தனிமைப்படுத்தல் விதிகளை மீறி நினைவு கூர்ந்தமைக்காக அவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் இன்று பகல் கைது செய்யபப்ட்டிருந்தார். அவரோடு அவரது கட்சியினை சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கஜேந்திரன் MP இன்று பகல் பொலிசாரால் பலாத்காரமாக இழுத்து செல்லப்படும் புகைப்படங்களும் வெளிவந்துள்ளன.
