பி.எச்.டி படித்தவரை நீக்கி பி.ஏ படித்தவரை துணைவேந்தராக்கிய தலிபான்கள்

ஆப்கானில் இருபது ஆண்டுகளின் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் ஆட்சி ரீதியில் மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத மாற்றங்களைச் செய்து வருகின்றனர்.

ஆட்சி ஆரம்பித்ததில் இருந்தே பெண்களுக்கெதிரான அடக்குமுறைகளை மேற்கொண்டு வரும் தலிபான்களால், அண்மையில் ஆண், பெண் மாணவர்களுக்கிடையில் திரைச்சீலையிடப்பட்டு கற்றல் நடவடிக்கையை ஆரம்பித்த புகைப்படம் உலகளவில் பேசப்பட்ட விடயமாக அமைந்திருந்தது.

அதே போன்று தற்போது தலிபான்களால், காபூல் பல்கலைக்கழகத்தில் கடந்த புதன் கிழமையன்று பி.எச்.டி படித்து முடித்துப் பதவியில் இருந்த பல்கலைக்கழக துணைவேந்தரான ஒஸ்மன் பாபூரியை பதவியிலிருந்து நீக்கி அப்பதவியில் பி.ஏ படித்த முகமட் அஷ்ரப் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அப் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றிய 70 ஆசிரியர்கள் பணியில் இருந்த நீங்கியுள்ளதுடன், அவர்கள் புதிய ஆசிரியர் நியமனங்களுக்கெதிராக ஆர்ப்பாட்டங்களை நடாத்தி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக பாகிஸ்தான், தலிபான்கள் ஆப்கானை மீளக்கட்டியெழுப்புவதற்கான உதவிகள் தேவைப்படின் கோரமுடியுமெனவும், அவர்கள் சர்வதேச நெறிமுறைக்கமைய செயற்பட வேண்டுமெனவும், பெண்கள் கல்விகற்பதற்கு அனுமதி வழங்குவார்கள் என நம்புவதாகவும் கூறியிருந்தது.

பி.எச்.டி படித்தவரை நீக்கி பி.ஏ படித்தவரை துணைவேந்தராக்கிய தலிபான்கள்

Social Share
Facebook
Twitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version