இலங்கையில் சுயாதீனமாக செயற்படும் மத்திய வங்கி, இறுக்கமான ஊழல்கள் அற்ற அளவுகோல்கள், மற்றும் சட்ட நிறுவுதல்கள் போன்ற விடயங்கள் சீர்செய்யபப்ட்டு சரியான நடைமுறைக்கு கொண்டு வராவிட்டால் இலங்கை இன்னமும் மோசமான பொருளாதார பின்னடைவு சந்திக்குமெனவும், கட்டுப்படுத்த முடியாத கடன்கள் அதிகரிக்குமெனவும் அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டு உறவுகள் குழு தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் தங்களது கூட்ட தொடர்களை நிறைவு செய்து சென்றுள்ள நிலையில் இவ்வாறான அறிவிப்பு, இலங்கை தொடர்பில் இன்னமும் நம்பிக்கை வரவில்லை என்பதனை வெளிக்காட்டுவதாகவே அமைக்கிறது.
இலங்கை மீள கட்டியெழுப்பப்டுவற்கு வெளிநாடுகளை மட்டுமே நம்பியுள்ள நிலையில், வெளிநாடுகள் எதிர்பார்ப்பவற்றை செய்ய வேண்டும் என்ற நிலைக்கு இலங்கை சென்றுள்ளது.
கடந்த காலங்களில் இலங்கை அரசாங்க ரீதியில் பல மாற்றங்களை செய்தாலும் கூட, இவ்வாறன அறிவித்தல்கள், இலங்கை தொடர்பில் இன்னமும் போதியளவான நம்பிக்கை தன்மையினை ஏற்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது.
